தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவுடன் தேர்தல் சமயங்களில் மட்டுமே கூட்டணி - ஜெயக்குமார் - பாஜக குறித்து ஜெயகுமார்

பாஜகவுடன் தேர்தல் சமயங்களில் மட்டுமே கூட்டணி எனவும்; திமுக எப்போதும் எங்கள் பகையாளி தான் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் தேர்தல் சமயங்களில் மட்டுமே கூட்டணி - ஜெயக்குமார்
பாஜகவுடன் தேர்தல் சமயங்களில் மட்டுமே கூட்டணி - ஜெயக்குமார்

By

Published : Nov 2, 2022, 4:27 PM IST

சென்னை: புளியந்தோப்பில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததில் பலியான சாந்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "சாந்தி விபத்துக்குள்ளாகி இரண்டு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. குறித்த நேரத்தில் வந்திருந்தால் அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை அரசு உருவாக்குகிறது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி உட்பட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியிருக்கிறது.

ரூ.4,500 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக ஆட்சியில் தான். ஆனால் அதனைத்தொடர்ந்து செயல்படுத்த திமுக தவறிவிட்டது. திமுகவுடன் இருந்த உறவு 1972ஆம் ஆண்டிலேயே முறிந்துவிட்டது. திமுக என்றைக்குமே பகையாளி தான். அதிமுக விவகாரத்தில், பாஜக தலையிட வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ராஜராஜசோழனின் பிறந்த விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details