தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்திலும் தொய்வில்லாமல் நடைபெறும் பிற சிகிச்சைகள் -  அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா பேரிடர் காலத்திலும், தொற்றால் பாதிக்கப்படாத பிற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Other treatments continued during the corona period said Minister Vijayabaskar
Other treatments continued during the corona period said Minister Vijayabaskar

By

Published : Aug 25, 2020, 3:23 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா தொற்று காலத்திலும் தமிழ்நாடு அரசு கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

தமிழ்நாடும் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20 ஆயிரத்து 550 நபர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 77 நபர்கள் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும் ஆயிரத்து 347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சவாலான சூழ்நிலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்காயிரத்து 154 கர்ப்பிணி தாய்மார்களும், 37 ஆயிரத்து 436 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88 ஆயிரத்து 280 அலகு ரத்தம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வில்லாமல் நடைபெற்றதன் காரணத்தினால், கரோனா தொற்று காலத்தில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கரோனா தொற்றினால் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலை ஏற்பட்டது. இதனால், கூடுதல் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டனர்.

இவர்களது அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் உயரிய சேவைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன” என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details