தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி' - கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை: கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Stalin
Stalin

By

Published : Oct 11, 2021, 2:05 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வெளிவட்டச் சாலை அமைத்துத் தர வேண்டும்.

மெகா டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைத்துத் தர வேண்டும். கூட்டுறவுச் சந்தை, குளிர்சாதன இருப்பு, அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளரைச் சந்தித்த இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,

"கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 1132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி. கோயம்புத்தூருக்கு மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்த கோரிக்கைவிடுத்துள்ளோம்" என்றார்

இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவித்தும் வெளியாகாத அரசாணை... குழப்பத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details