பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”சீனாவில் தொடங்கி 124க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் நோய்த் தொற்று வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் நடப்புக் கல்வி ஆண்டுக்குரிய தேர்வுப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களை பாதுகாக்க அறுவுறுத்தல் அன்றாடம் பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கோவிட்-19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்கவும், தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்த கிருமிநாசினிகள் போன்ற பொருள்களை பள்ளியின் நிதி அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியின் மூலம் வாங்கிக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட கடிதம் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் நாளன்று நகராட்சி, மாநகராட்சி, பொதுச் சுகாதாரத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கிருமிநாசினி தெளித்திட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 தொற்று அபாயம்: இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம் முடிவை எட்டியது!