கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக உலகளவில் இதுவரை 1,79,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்தியாவை பொருத்தவரையில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 147 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை, கோவிட் -19 வைரஸ் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி விடுமுறை, வணிக வளாகங்கள், திரையரங்கம் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு, வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதனால் சென்னையில் உள்ள அனைத்து பெரிய வணிக நிறுவனங்களும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும்.