தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் - ஆணை வெளியீடு - பள்ளிக்கல்வித் துறை

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
ஆசிரியர்களுக்கு பயிற்ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்சி வகுப்புகள்

By

Published : Nov 20, 2021, 9:34 AM IST

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் (Training classes for teachers) நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண்: 110இன்கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத் திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைச் செயல்படுத்தும்விதமாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் ஆயிரத்து 464 பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி உள்ளிட்ட 35 வகையான பணியிடைப் பயிற்சி, அறிவுத்திறன் வகுப்புப் பயிற்சி, கணினிப் பயிற்சி உள்ளிட்டவை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Farm Laws: 'போராடிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து' - கே.எஸ். அழகிரி

ABOUT THE AUTHOR

...view details