சென்னை: விழுப்புரத்தின் பொன்னான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கே.பாண்டுரங்கன். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “கடந்த ஜுலை 14, 2020ஆம் ஆண்டில் எனது மனைவி கோமதியை முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்திருந்தேன். பிரசவ வலி வராததால் அனுமதிக்கப்பட்ட மறுநாளே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அடுத்த 5 நாட்களில் எனது மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
5 லட்சம் இழப்பீடு
இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் உள்ள அலட்சியத்தின் காரணமாகவே எனது மனைவி உயிரிழந்தார். இதேபோல் ஏற்கனவே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.