தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 4, 2022, 10:34 PM IST

ETV Bharat / state

பிரசவத்தின்போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரசவத்தின்போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்த மருத்துவர்- 12 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணுக்கு கிடைத்த இழப்பீடு...
வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்த மருத்துவர்- 12 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணுக்கு கிடைத்த இழப்பீடு...

திருவள்ளூர்:திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் காவலாளி பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் பாலாஜி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இ- மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார். இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் சுகாதார பணிகள் இணை இயக்குநர் அளித்த அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து, மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்திருந்தால், குபேந்திரி வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்திருக்க மாட்டார்கள். 12 ஆண்டுகள் அப்பெண்ணும் வலியில் துடித்திருக்க மாட்டார் எனக் கூறிய ஆணைய உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட மூத்த தம்பதியினர் - பாடுபட்டுமீட்ட மீட்புத்துறை!

ABOUT THE AUTHOR

...view details