சென்னையில் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு வருடமும் ஆந்திரா-தமிழ்நாடு மாநிலங்களின் ஒப்பந்தபடி கிருஷ்ணா அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்காக 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையிலிருந்து ஏப்ரல் மாதம் 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் பெற உத்தரவு - தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி
சென்னை: மாநகரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் கண்டலேறு அணையிலிருந்து 8 டி.எம்.சி. தண்ணீர் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று இரவு 8.50 டி.எம்.சி. தண்ணீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டுக்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, நீர்வரத்து நிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட நீர்வரத்திற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவிக்கையில், "சென்னை மாநகரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கண்டலேறு அணையிலிருந்து 8 டி.எம்.சி. தண்ணீர் பெற விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.