தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழிக் கடைக்காரர் தாக்குதல் வழக்கு - காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முகக்கவசம் அணியாத கோழிக் கடைக்காரரை காவல் உதவி ஆய்வாளர் ஷூ காலால் மிதித்து காயப்படுத்திய விவகாரத்தில், சென்னை காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Aug 24, 2021, 10:59 PM IST

காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கோழி கடையில் பணிபுரியும் நபர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடை ஊழியரை காவல் உதவி ஆய்வாளர் ஷூ காலால் மிதித்துள்ளார்.

கோழிக் கடைக்காரர் மீது தாக்குதல்

இதன் காணொலி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியை, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான துரை. ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார்.

காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தற்போது அவர் இதுகுறித்து சென்னை காவல்துறை தெற்கு இணை ஆணையர் விசாரணை செய்து, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:படகு இறங்குதள விரிவாக்கத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details