சென்னை மக்களின்போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய 3 ஆயிரத்து 233 பேருந்துகள் அட்டவணையிடப்பட்டு இயக்கப்பட்டன. கரோனா காரணமாக பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, பயண நடைகளும் குறைக்கப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இதனிடையே சாதாரண கட்டண பேருந்துகள் அட்டவணைப்படி அனைத்து பயண நடைகளிலும் இயக்கப்படாததால் பொதுமக்களிடமிருந்து தினந்தோறும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் அரசுக்கும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயர்க்கும் களங்கம் ஏற்படுகிறது.