பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கான முகமையாக அண்ணா பல்கலைக்கழகதத்திற்கு உயர் கல்வித் துறை அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடிக் கலந்தாய்வு 2017-18ஆம் கல்வியாண்டு வரை நடைபெற்று வந்தது.
அடுத்தக் கல்வியாண்டில் (2018-19) அரசின் வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வினை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தியது. இதன்பிறகு, தமிழ்நாடு இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவை அரசு மாற்றி அமைத்தது. அதில் தனக்கு வழங்கப்பட்ட பதவியினை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா ஏற்க மறுத்ததுடன், பல்கலைக்கழகத்திலிருந்து நியமிக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களையும் கலந்தாய்வுப் பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் 2019-20ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்தியது. அப்போது தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், ”பொறியியல் படிப்பில் 2007ஆம் ஆண்டு முதல் ஒற்றைசாளர முறையில் மாணவர்கள் சேர்க்கையை அரசு நடத்தி வருகிறது.