தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மறைந்த மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
மறைந்த மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

By

Published : Jan 3, 2023, 5:12 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 101 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடத்திற்கு 6 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு 11 நபர்களுக்கும் களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு 45 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 3 நபர்களுக்கும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 5 நபர்களுக்கும், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு 1 நபருக்கும், காவலாளி பணியிடத்திற்கு 13 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) திரு. சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details