சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை (நவம்பர் 25) முதல் தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26, 27இல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை