தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக ஆளும் அதிமுகவில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக யார் என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விவாதங்கள் எழுந்துள்ளன.
இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.
இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வரும் 7ஆம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் கடந்த சில தினங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 23ஆம் தேதி தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், பிரதமர் மோடியின் வாழ்த்து தனக்கு புத்துயிரும் உத்வேகமும் அளித்துள்ளதாகவும், இது நாட்டு மக்களுக்கு மேலும் உழைக்க தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை தற்சார்ப்பு மிக்கதாக மாற்றுவதில் பிரதமரின் பங்களிப்பை பாராட்டிய ஓபிஎஸ், அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திப்பதாகத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:திமுகவின் பொய் பரப்புரையை மக்கள் நம்பவில்லை: ஹெச்.ராஜா