சென்னை: பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறியதாவது, இன்றைய நாளிதழில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதில் பாஜக ஒரு இடத்தை டிடிவி தினகரனுக்கு வழங்குவதாகவும் வெளியான செய்தி குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பாஜக சித்தாந்தம் வேறு எங்களுடைய சித்தாந்தம் வேறு. பாஜக கொள்கை வேறு எங்களுடைய கொள்கை வேறு, என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்து விட்டார் என பதிலளித்தார்.
"பா.ஜ.க. தேசிய கட்சி மற்றும் எங்களுடைய தோழமைக் கட்சி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களுடைய கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் டிடிவி தினகரன், மற்றும் சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் இடமில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்", என்றும், ஒரு கட்சியை களங்கப்படுத்தும் நோக்கி செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றுக்கு எதிராக போராட்டம், தலைவர்கள் பிறந்த நாள் என மக்கள் பிரச்சனைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் குரல் கொடுத்துள்ளோம். ஊரக உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்து பேசியவர், பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணம் கொள்ளையடித்தது திமுக ஆட்சி. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். திமுக ஆட்சியில் இது தான் இருக்கிறது எனவும், மலைமுழுங்கி மகா தேவனை பார்த்திருக்கிறீர்களா என திமுகவை ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
மேலும் ஒரு பிளக்ஸ்க்கு அதிக பணம் திமுகவில் வாங்கப்படுவதாகவும், அதிமுக ஆட்சியில் குறைந்த பணம் தான் ஆனது என்றும், மக்களிடம் பணம் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார்.