சென்னைபசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை ஈபிஎஸ்க்கு 69 மாவட்ட செயலாளர்களும், ஓபிஎஸ்க்கு 6 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது.
இதனால் எப்படியாவது பொதுக்குழுவைத் தடைசெய்ய வேண்டுமென ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர். முதலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பில் இபிஎஸ் தரப்பிற்கு பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பொதுக்குழுவைத் தள்ளி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை, திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தப்படும் என இபிஎஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
நாளை அதிமுக பொதுக்குழு: தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு முயற்சி ? தர்மயுத்தம் நாயகரின் கடைசி அஸ்திரம் வெற்றி பெறுமா ?? இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவைத் தள்ளிவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று பொதுக்குழுவை தடை செய்வதற்குத் தேர்தல் ஆணையத்தை அணுகவும் ஓபிஎஸ் தரப்பு முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஈபிஎஸ் தரப்பினர் எப்படியாவது பொதுக்குழுவைக் கூட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். நாளை (ஜூன்.23) பொதுக்குழு நடைபெற்றால் ஒற்றை தலைமை விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்.. ஈபிஎஸ் தரப்பில் பேச தயாரா ? - புகழேந்தி