தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா சி.எம்.டி.ஏ அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களிடம் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோயம்பேடு சந்தை விரைவில் திறக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
'கோயம்பேடு சந்தை திறப்பா?' பார்வையிட வரும் ஓபிஎஸ்
சென்னை: கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இன்று (ஆக.27) தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்தையை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
Ops to visit and inspect Koyambedu market
இந்நிலையில் இன்று (ஆக.27) துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோயம்பேடு சந்தையை நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். இதையடுத்து அவர், தலைமைச் செயலகத்தில் வணிகர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல மாதங்களாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு சந்தை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க... கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: விக்கிரமராஜா