தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2021, 9:47 PM IST

ETV Bharat / state

டெட் தேர்ச்சி வாழ்நாள் முழுக்க செல்லும்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓ.பி.எஸ்

டெட் (TET) தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லத்தக்கது என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

ops-thanked-pm-for-extended-validity-for-tet-exam-certificate
டெட் தேர்ச்சி வாழ்நாள் முழுக்க செல்லும்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓ.பி.எஸ்

சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ் ஏழு வருடங்கள் மட்டுமே செல்லும் என்பதை நீட்டித்து தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது.

இது 2011ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும் வகையில் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு புதிதாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஓ. பன்னீர் செல்வம், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும் ஆசிரியர் வேலை தேடுவோருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை இது நிச்சயம் ஏற்படுத்தித் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் 'தமிழ்'

ABOUT THE AUTHOR

...view details