தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாகதான் நிற்பார்.. புகழேந்தி - ஓபிஎஸ்சின் ஆதரவாளர்

எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாகதான் நிற்பார் என ஓபிஎஸ்சின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாகதான் நிற்பார்.. புகழேந்தி
எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாகதான் நிற்பார்.. புகழேந்தி

By

Published : Aug 27, 2022, 7:41 AM IST

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர், குன்னம் ராமச்சந்திரன், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் முன்னாள் எம்.பி செஞ்சி ஏழுமலை, முன்னாள் சட்டமப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி செஞ்சி ஏழுமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "எம்.ஜி.ஆரால் கலை வாரிசு என்றழைக்கப்பட்ட பாக்யராஜ், இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாகதான் நிற்பார். அதை தமிழ்நாடு பார்க்கும். நாடு போற்றும் நல்ல தீர்ப்பு நாளை வரும். ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும் எங்கே இருக்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது" என கூறினார்.

இதையும் படிங்க:அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய முயற்சி செய்வேன்.. இயக்குநர் பாக்யராஜ்

ABOUT THE AUTHOR

...view details