இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையிலும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் 'மேகதாதுவில் அணை கட்டப்படும்' என கர்நாடக முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட 2014ஆம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எந்த நீர் திட்டத்திற்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் என்ற தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, என்னால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 5, 2015ஆம் ஆண்டு மார்ச் 27 ஆகிய நாள்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்தத் தீர்மானங்கள் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 2015ஆம் ஆண்டு மார்ச் 12 ஆகிய தேதிகளில் கடிதங்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.
இது தொடர்பாக 2015 மார்சி 26ஆம் அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.