இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது.
முதல் அலையின் போது தமிழ்நாட்டில் ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 7,000 என்ற அளவில் இருந்தது. இரண்டாவது அலையின்போது ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 36,000 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, ஒரு நாள் உயிரிழப்பு என்பது அதிகரித்தது.
எனவே, அரசு முன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். இந்த முன்கணிப்பு மாதிரிகளுக்கு கரோனா நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அவசியம்.