சென்னை:அதிமுகவில் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாகவும், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்திற்குப் பின்பு அக்டோபர் 7ல் (இன்று) முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். மேலும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் இன்று அறிவிக்கப்பட்டது.