தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுச்செயலாளராக செயல்பட ஈபிஎஸ்ஸுக்கு தடை விதிக்கணும் - ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு - சென்னை மாவட்ட செய்தி

அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 7:59 PM IST

சென்னை: அதிமுகவின் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர்.

அந்த மனுக்களை நாளை (மார்ச் 29) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் தாக்கல் செய்துள்ள மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என்றும், கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கவும், தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நாளை காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details