அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நமது அம்மா நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்து, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இரு அணிகளாக செயல்படுகின்றனர். அதிமுகவில் உச்சகட்ட பதவி போர் என அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகிறது. மேலும் 1989ல் ஏற்பட்ட ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி போன்று அதிமுக(எடப்பாடி), அதிமுக(பன்னீர்செல்வம்) அணி உருவாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.