தேனி மாவட்டத்தில் போடி தொகுதி வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதனிடையே, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தீவிர பரப்புரை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு,’வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என நம்பிக்கையுடன் பதிலளித்தார்.