தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஓபிஎஸ் ஒரு வசூல் ராஜா..!' - ஜெயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ. பன்னீர்செல்வம் பேராசையுடன் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

’ஓபிஎஸ் ஒரு வசூல் ராஜா..!’ - ஜெயக்குமார் பகிரங்க குற்றஞ்சாட்டு
’ஓபிஎஸ் ஒரு வசூல் ராஜா..!’ - ஜெயக்குமார் பகிரங்க குற்றஞ்சாட்டு

By

Published : Aug 30, 2022, 10:36 PM IST

சென்னை:ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீதேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், 'தமிழ்நாட்டில் திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது.

பதவி ஆசை கொண்ட பன்னீர்செல்வம், வெவ்வேறு துறை அமைச்சர்களிடம் இருந்து அவருக்குத்தேவையான துறைகளை பிரித்து எடுத்துக்கொண்டு செயல்பட்டவர் பன்னீர்செல்வம். வியாசர்பாடி கேபி பார்க் குடியிருப்பு கட்டப்பட்டதில் அதிக அளவில் கமிஷன் பெற்றதாலேயே, தரமற்ற குடியிருப்புகள் கட்டப்பட்டது.

அதிமுக ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாமல் இருந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் துறையில் மட்டும் ஊழல் புகார் சொல்லப்பட்டதற்கு அதுவே காரணம். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் இருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம்' என்றார்.

மேலும் அவர் , 'துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர் பன்னீர்செல்வம். பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனையில் 50 பேரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 பேர் மட்டுமே பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். டிடிவி தினகரன், சசிகலாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர் பன்னீர்செல்வம்.

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. கஞ்சா, குட்கா, பிரளவுன் சுகர் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு காவலர்கள் அமைதியாக இருக்கின்றனர்’ எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: திமுகவினருக்கு மக்கள் பிரச்னைகளைவிட கட்சி பிரச்னைகள் தான் முக்கியம்... கவுன்சிலர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details