தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மனுக்கள் தள்ளுபடி - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மனுக்கள் தள்ளுபடி
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மனுக்கள் தள்ளுபடி

By

Published : Aug 24, 2021, 11:33 AM IST

Updated : Aug 24, 2021, 1:17 PM IST

11:24 August 24

சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மனுக்கள் தள்ளுபடி

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இந்த காரணம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆஜராக சம்மன்

இந்த வழக்கில் இருவரும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஆஜராக இயலவில்லை என்றும், இன்று ஒரு நாள் ஆஜராக விலக்கு கோரியும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விலக்கு அளிக்க மறுப்பு

அதைநிராகரித்த நீதிபதி, சம்மன் அனுப்பி முதல் முறை ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என கூறி, அந்த மனுக்களை நிராகரித்ததுடன், செப்டம்பர் 14ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் - ஓபிஎஸ்
 

Last Updated : Aug 24, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details