அதிமுக சீனியர் மதுசூதனனிடம் ஓபிஎஸ் நலம் விசாரிப்பு! - madusudhanan
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.
மதுசூதனனிடம் ஓ.பி.எஸ் நலம் விசாரிப்பு
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றுநோய் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப்பின் தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இதனையடுத்து, நேற்று(புதன்கிழமை) சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.