நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் மையப் பகுதியில் உள்ள அல்-நூர் எனும் மசூதி உள்ளிட்ட இருவேறு மசூதிகளில் புகுந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீது தானியங்கி துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உள்பட 49 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன்,பலர் காயமடைந்தனர்.
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு - ஓ.பி.எஸ் கண்டனம் - நியூசிலாந்து
சென்னை: நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாகவும், தாக்குதலில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ops contemted to newzealand attack
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாகவும், தாக்குதலில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.