தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா மீது மரியாதை உள்ளது - ஓபிஎஸ் வாக்குமூலம்

சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

By

Published : Mar 22, 2022, 4:36 PM IST

சசிகலா மீது மரியாதை உள்ளது- ஓபிஎஸ் வாக்குமூலம்
சசிகலா மீது மரியாதை உள்ளது- ஓபிஎஸ் வாக்குமூலம்

சென்னை:ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஆணையம் சார்பில் கேள்விகள் கேட்கப்பட்டு ஓபிஎஸ் விளக்கமளித்தார். பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையை ஓபிஎஸ்ஸிடம் தொடங்கி நடத்தினார். அந்த வாக்குமூலம் விரிவாக,

ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகத் தான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டி சரிதானா.?

ஓ.பிஎஸ்: சரிதான்

ராஜா செந்தூர்பாண்டியன்: - நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ? -

ஓ.பி.எஸ்: ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன் என்றும்; அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ராஜா செந்தூர்பாண்டியன்: மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், நீங்கள் தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தான், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள் ?

ஓ.பி.எஸ்: ஆணையம் பணித்ததால் வந்தேன் என்றார்.

ராஜா செந்தூர்பாண்டியன்: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?

ஓ.பி.எஸ்: சரிதான்.

ராஜாசெந்தூர் பாண்டியன்: சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா ?

ஓ.பி.எஸ்: சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது எனத் தெரிவித்தார்.

ராஜா செந்தூர்பாண்டியன்: விசாரணை அமைக்கப்பட்ட முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?

ஓ.பி.எஸ்: நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளிலும் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை எனத் தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆஜர்

இதையும் படிங்க:ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details