முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற, நம் ஆன்றோர் வாக்கிற்கிணங்க அனைவராலும் நேசிக்கப்படும் தூய உள்ளங்களான குழந்தைச் செல்வங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். நாளைய வளமான தலைமுறையாய் வளர குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிடுவோம் என்று கூறியுள்ளார்.