திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் நேற்று (மார்ச் 04) ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா சசிகலாவை சந்தித்தார்.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (மார்ச் 05) அதிமுகவில் இருந்து ஓ. ராஜா உள்பட நான்கு பேர் நீக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓ. ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஓபிஎஸ் ஆதரவுடன் அதிமுகவில் நுழைகிறாரா சசிகலா? - திருச்செந்தூரில் நடைபெற்ற திடீர் சந்திப்பின் பின்னணி!