சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், பிரதமர் மோடி இன்று (ஜூலை 29) காலை 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் அகமதாபாத் செல்ல உள்ளார்.
நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களுடன் சேர்ந்து வரவேற்றார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று காலை பங்கேற்ற பிரதமர் மோடி, அதன் பின் காலை 11:50 மணியளவில் பிரதமர் மோடி விமான நிலையம் வர இருக்கிறார்.