தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை - எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (மார்ச் 30) விசாரணைக்கு வரவுள்ளது.

mhc
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Mar 29, 2023, 2:27 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை நாளை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரின் மனுக்களும் நாளை பட்டியலிடப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துத் தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்பட 4 பேரும் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக மற்ற மூவரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்றும் அவற்றைச் சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "திராவிட மாடலுக்குள் கார்ப்பரேட் மாடல்" - அமைச்சர் பிடிஆர் பேச்சால் அரசு ஊழியர்கள் அப்செட்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details