இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா (49) கரோனா பெருந்தொற்று காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 8 ஆம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று(மே.20) காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவச் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று (மே.20) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது, அங்கு வந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதைத் தடுக்க முயன்ற அவருடைய மனைவி கஸ்தூரியை தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று விட்டனர் என அவரது மனைவி புகார் செய்துள்ளார்.