சென்னை:சட்டப்பேரவையில் இன்றைய உள்துறை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்த ஆண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்திற்காக கூடிய சட்டப்பேரவைக் கூட்டம் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளது. ஆக்கபூர்வமாக இருந்தது என்பதை விட ஜனநாயகத்தின் அரங்கேற்ற மேடையாக சட்டப்பேரவை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்' எனத் தெரிவித்தார்.
'எதிர்க்கட்சிகளுக்கு தான் பேரவையில் அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
ஆளும் கட்சி உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சிகளுக்குத் தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டதாக நான் கருதுகிறேன் என முதலமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார்.
’எதிர்க்கட்சிகளுக்கு தான் பேரவையில் அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது ‘ - மு.க.ஸ்டாலின்
மேலும் அவர் 'ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சிகளுக்குத் தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டதாக நான் கருதுகிறேன். சபாநாயகர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். இன்று சபாநாயகராக பணியைத் திறம்பட செய்துள்ளார்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெஞ்சுக்கு நீதியில் பவர்புல் வசனங்கள்- உதயநிதி