தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை கட்டக்கூடிய முயற்சிகளை எதிர்ப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மேகதாது பிரச்னை

மேகதாது அணை கட்டக்கூடிய கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : Mar 21, 2022, 2:59 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 21) நடைபெற்றது.

அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும்.

அணைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மேகதாது அணை கட்டக்கூடிய முயற்சிகளை தமிழ்நாடு அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். காவிரி உரிமையை, உழவர்களின் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details