தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதபூஜை பண்டிகையினை முன்னிட்டு சிறப்புப்பேருந்துகள் இயக்கம்! - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து 30.09.2022 முதல் 01.10.2022ஆகிய மூன்று நாட்கள் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜை பண்டிகை முன்னிட்டு- சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
ஆயுதபூஜை பண்டிகை முன்னிட்டு- சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

By

Published : Sep 21, 2022, 10:00 PM IST

சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, செப்.30 முதல் அக்.01 வரையுள்ள நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இதில், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்; போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்; திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி பைபாஸ்(மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை) அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் செல்லும் பேருந்துக்கள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப்பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்புப்பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சூடுபிடிக்கும் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் - சோனியா காந்தியை சந்தித்த கெலாட்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details