தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபரேஷன் மின்னல் வேட்டை... ரவுடிகள் 4 பேர் கைது - operation minnal vettai in ambattur

அம்பத்தூரில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷன் மின்னல் வேட்டையில் ரவுடிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 4, 2022, 7:56 AM IST

தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிராக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆபரேஷன் மின்னல் வேட்டை’ என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகள் மற்றும் பிற மாநிலங்களில் பதுங்கியிருந்த சிலரும் கைது செய்யப்பட்டு வந்தனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டை SP தீபா சத்யன்
தலைமையிலான தனிப்படை போலீசார் அரக்கோணம் காவல் நிலைய ஆய்வாளர் சாலமன் தலைமையில் கொலை, கொள்ளை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடிகள் திலீப், பன்னீர்செல்வம்,ராஜ் கமல்,கௌதம், அஜித், விஜய், ரவிக்குமார் வசந்த் குமார் ஆகியோரை தேடி வந்தனர்.

இதில் சிலர் செல்போன் எண்கள் அம்பத்தூர் பகுதியில் உள்ளதை அறிந்த ஆய்வாளர் சாலமன் மற்றும் தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முள் புதரில் பதுங்கி இருந்த 6 பேரில் நான்கு பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடமிருந்து இருந்து கஞ்சா கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொடரும் மழை; கல்வி நிறுவனங்கள் விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details