கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதையடுத்து தளர்வுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளன. அதனால் ரயில் நிலையங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இணையதள மூலம் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு மையங்கள் செயல்படத் தொடங்கிவுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறப்பு - சென்ட்ரல் ரயில் நிலைய முன் பதிவு மையம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.
chennai-central-railway-station
தற்போது சென்னையிலிருந்து டெல்லிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது, அவற்றுக்கான முன்பதிவும் ஏற்கனவே இணைதள வசதி மூலம் நிறைவடைந்துள்ளதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள முன் பதிவு மையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், ஏஜெண்டுகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்