தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு! - மெட்ரோ நிலையம்

சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 31, 2023, 10:01 PM IST

சென்னை: எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 45 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்பட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர இன்று (மார்ச் 31) திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை இனிவரும் காலங்களில் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு

இந்த வசதிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இன்று (மார்ச் 31) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் உடன் கலந்து கொண்டனர்.

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடி - மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது… காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details