முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 3 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பால்வளத் துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவனக் கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடம், மீன்வளத் துறை சார்பில் 8 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை கட்டடங்கள்
- திண்டுக்கல்லில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனை கட்டடம்;
- வேலூரில் குடியாத்தம் வட்டம், கள்ளியூர் கிராமத்தில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடம்.
- திருப்பத்தூரில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம்.
- கள்ளக்குறிச்சியில் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை முதன்மை மருத்துவமனை கட்டடம்.
- காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் , காக்களூர் பால் பண்ணையில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் , 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவனக் கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடம்;
- தேனி பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணை பகுதியில் அமைந்துள்ள மீன் விதை பண்ணையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகம் உள்ளிட்டவை திறந்து வைக்கப்பட்டது.