தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஆர் வெற்றி செல்லாது; உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

சென்னை: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Jul 8, 2019, 12:37 PM IST

2019 மக்களவைத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், ஓபிஆர் மட்டும் வெற்றி பெற்று அக்கட்சியின் ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், இவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நடந்து முடிந்த தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்ததாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேனி தொகுதி வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தலை நிறுத்த ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய மனுதாரர், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details