தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் ’ - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - மாணவர்கள் தைரியமாக தேர்வினை எழுத வேண்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மட்டும் அன்று பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

’ தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது’ - பள்ளி கல்வித் துறை
’ தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது’ - பள்ளி கல்வித் துறை

By

Published : May 5, 2022, 9:03 AM IST

Updated : May 5, 2022, 4:30 PM IST

சென்னை:எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சார்லஸ் அப்பாதுரை மூன்றாமாண்டு கோப்பைக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். பொதுத் தேர்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொது தேர்வுகளை கண்காணிக்க 4291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

’ தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது’ - பள்ளி கல்வித் துறை

கத்திரி வெயில் துவங்கி அதிக வெப்ப சூழல் உள்ளது. அதனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு அன்று மட்டும் பள்ளிக்கு வருவது குறித்து முதலமைச்சருடன் நேற்று (மே 4) ஆலோசிக்கப்பட்டது.

’ தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது’ - பள்ளி கல்வித் துறை

மேலும் முதலமைச்சரிடம் மாணவர்கள் கற்றதைத் தேர்வாக எழுத வேண்டும் என எடுத்துக் கூறினோம். அதனடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடைபெறும் அன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடும்.

மாணவர்கள் தைரியமாக தேர்வினை எழுத வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்காதீர்கள். முதலமைச்சர் துவங்கியுள்ள ’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் சாதாரண மனிதனும் சிற்பியாக முடியும். எனவே தைரியமுடன் தேர்வை எதிர் கொள்ளுங்கள்.

தேர்வின் போதும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று நான் எங்கும் கூறவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் அதுபோன்று கூறவில்லை. மாணவர்கள் தங்கள் பாதுகாப்பை கருதி வேண்டுமென்றால் அணிந்துகொள்ளலாம். கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கும் போது வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் முகக்கவசம் அணிவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நடைபெறும் பொதுத் தேர்வு கடந்த 45 ஆண்டுகளாக எவ்வாறு நடைபெறுகின்றதோ அதேபோன்று பாதுகாப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு பின்னர் தொடங்கப்பட்ட நடப்பு கல்வி ஆண்டில் போதுமான கால அவகாசம் இல்லாததால் பாடங்களை நடத்தி முடிக்க விளையாட்டுப் பிரிவு வகுப்புகளையும் பயன்படுத்த வேண்டியது இருந்தது. வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் விளையாடும் வகையில் வகுப்புகள் நடைபெறும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vignesh Lockup Death: 'விக்னேஷ் மரணவழக்கில் 15 நாட்களில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம்' - அருண் ஹெல்டர் தகவல்

Last Updated : May 5, 2022, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details