தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

51% பேர் மட்டுமே பங்கேற்ற குரூப்-1 தேர்வு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் 51 விழுக்காட்டினரே பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Only 51% participated in the Group-1 examination
Only 51% participated in the Group-1 examination

By

Published : Jan 3, 2021, 3:11 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் 4 பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்கு 2020 ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401ஆண்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும்,11 திருநங்கைகளும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் 856 மையங்களில் நடைபெற்றன. சென்னையில் 150 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 தேர்வர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 தேர்வர்கள் பங்கேற்றனர். ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 690 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் 51.8 விழுக்காடாக உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details