இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், சென்னை சாந்தோம் அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் இலவசமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.
இப்பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பார் பதவிகளுக்கான (TNUSRB - 2020) பொது, போட்டித் தேர்வுக்கு (காலிப்பணியிடங்கள் - 10,906) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித்தேர்வுக்கான இணையவழி (WEBINAR) இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தால் தொடங்கப்படவுள்ளது.