தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம் - tamil nadu Law Department

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்த நிலையில், சட்டத்துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 25, 2022, 12:14 PM IST

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் தரப்பில் நேற்று விளக்கம் கேட்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு சட்டத்துறை மூலம் விளக்கம்

அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், இதற்கு முன் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் அளித்த சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான விளக்கத்தை சட்டத்துறை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதையும் படிங்க : திருவண்ணாமலை தீபத்திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details