தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஆன்லைனில் பதிவு இன்று தொடக்கம் - polytechnic colleges

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்றுமுதல் (ஜூன் 25) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பாலிடெக்னிக் கல்லூரி
பாலிடெக்னிக் கல்லூரி

By

Published : Jun 25, 2021, 11:06 AM IST

சென்னை:தமிழ்நாட்டிலுள்ளபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றுமுதல் (ஜூன் 25) ஜூலை 12ஆம் தேதிவரை https://tngptc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

கலந்தாய்வு

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 19ஆம் தேதி நடத்தப்படும். தொடர்ந்து அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இத்துடன் மேலும் மூன்று இணைப்புப் பெற்றபாலிடெக்னிக் கல்லூரிகளும் இந்தாண்டு ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்களைச் சேர்க்க கோரியுள்ளது.

ஆன்லைனில் பதிவு

அதன்படி, தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இணைப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details