தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் சேர்க்கை - ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவரம் சேர்ப்பு - பொறியியல் சேர்க்கை

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவரம் சேர்க்கப்பட்டுள்ளது.

vanniyar
vanniyar

By

Published : Jul 27, 2021, 1:25 PM IST

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்காக எம்பிசி பிரிவில் வன்னியர், சீர்மரப்பினர் வகுப்பு தனியாக கேட்கப்படுகிறது.

மேலும் ஜூலை 26 ஆம் தேதி விண்ணப்பம் செய்த 5 ஆயிரம் எம்பிசி மாணவர்களில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நேற்று (ஜூலை.26) இரவே தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை.26) விண்ணப்பம் செய்த 2,811 மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் முகப்பிலும் இட ஒதுக்கீட்டினை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையில் www.tneaonline.org , www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல் நாளான நேற்று (ஜூலை.26) மாலை 6 மணி வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 25ஆயிரத்து 874 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலந்தாய்வில் பங்கேற்க 10 ஆயிரத்து 248 மாணவர்கள் முதல் நாளே கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 6,456 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பொறியியல் படிப்பில் சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்யுங்கள்!'

ABOUT THE AUTHOR

...view details